ஆந்திர மாநில முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி  தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

அந்தவகையில் இன்று அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர், பிற மாநில முதலமைச்சர்கள் என்று அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கட்சியின் தொண்டர்கள் புகைப்படம் வைத்தும், கோடி ஏற்றியும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

அவருடைய 50வது பிறந்த நாளில் அவருக்கு எப்போதும் அமைதியும், நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தன்னுடைய வாழ்த்துக்களை மனமார தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin birthday wishes to andhira chief minister jegan mohan reddy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->