முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!
chief minister mk stalin condoles to punjap ex cm death
முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சியினர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மூத்த தலைவரும் ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
பிரகாஷ் சிங் பாதல் இந்திய அரசியல் மற்றும் பஞ்சாபின் நலனுக்காக ஆற்றிய பங்களிப்புகள் எப்போதும் நம் நினைவுகளில் நிலைத்து இருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin condoles to punjap ex cm death