மாணவர்களுக்கு குட் நியூஸ்! அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்! - Seithipunal
Seithipunal


அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கு முன்னோடி திட்டமாக திகழ்ந்து கொண்டிருப்பதாக திமுகவினர் பெருமையாக கூறிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டு பட்ஜெட்டில் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் கால உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 2,23,536 குழந்தைகள் பயனடைந்து உள்ளார்கள். முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கு முன்னோடி திட்டமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister MK Stalin to launch the breakfast program in government aided primary schools tomorrow


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->