இந்த மாதத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வு?
Chief Secretary likely voluntary retirement with this month
இந்த மாதத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டில் பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதில் 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகுப்பு வருபவர் இறையன்பு. இவரது பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் வரை உள்ளது.
ஆனால் இந்த 28ஆம் தேதியுடன் இவர் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் அல்லது முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் புதிய தலைமை செயலாளராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Chief Secretary likely voluntary retirement with this month