"மாதந்தோறும் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும்" தலைமைச் செயலாளர் கலெக்டர்களுக்கு வேண்டுகோள் !! - Seithipunal
Seithipunal


மாதந்தோறும் மாவட்ட கல்வித்துறையில் ஆய்வு நடத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதற்க்கு முன்னதாகவே, இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு உத்தரவு(G.O) ஒன்று பிறப்பித்து உள்ளது.

தற்போது வழக்கமாக நடைபெறும் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுக் கூட்டங்களைப் போன்று கல்வி ஆய்வும் இனி மாதந்தோறும் நடைபெற வேண்டும். ஒரு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பார், அந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளில் உள்கட்டமைப்புத் தேவைகள், கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் பிற கல்விச் சிக்கல்கள், குழந்தைகளின் சேர்க்கை, மாணவர்களின் வருகை மற்றும் ஹைடெக் ஐசிடி வசதிகள் உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு  மேற்கொள்வார்கள்.

இந்த கல்வி ஆய்வு கூட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை அணைத்து  மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருப்பார். 

காவல்துறை, ஊரக வளர்ச்சி, சமூக நலம், போக்குவரத்து, மாற்றுத்திறனாளிகள், உயர்கல்வி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மற்றும் எஸ்எம்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது போன்ற மாவட்ட அளவிலான கூட்டத்தைத் தொடர்ந்து, தேவைப்படும் நேரத்தில் தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief secretary requests all district collector to take action on education research


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->