தீவிரமடையும் மாண்டஸ் புயல்..!! சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை..!!
Chief Secretary Urgent meeting at Chennai Corporation Office Mantus Storm
வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கு 400 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புகையல் நகர்ந்து வந்த நிலையில் தற்பொழுது 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புயல் எச்சரிக்கை காரணமாக நாளை வேலூர், திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரகத் திறன் தேர்வு புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Chief Secretary Urgent meeting at Chennai Corporation Office Mantus Storm