குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தும் குழந்தை.! ரூ.50 ஆயிரம் நிவாரணம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளன. இதனால் 2017-ல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் 2020-ல் மீண்டும் கருவுற்று பெண் குழந்தை பெற்றேன். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண்களுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பல பெண்கள் கருவுற்று குழந்தை பெறுகின்றனர். 

மனுதாரர் கருவுற்றதும் குழந்தை வேண்டாம் என்றால் தொடக்கத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் அவர் குழந்தை பெற்றுள்ளார்.

ஆகையால் மனுதாரர் அரசிடம் இழப்பீடு எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அவரது குடும்ப நிலமையை கருத்தில் கொண்டு அரசு அவருக்கு 8 வாரங்களில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child despite family planning surgery Relief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->