#தர்மபுரி || கதவை பூட்டிக் கொண்டு தூங்கிய செவிலியர்.. தடுப்பூசி காய்ச்சலால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கதவை பூட்டிக்கொண்டு இரவு தூங்கியதால் பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி பிரசவத்திற்காக கடந்த 28ஆம் தேதி பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்று இரவு 11 மணிக்கு அதிக அளவில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். 

அவர்களை அழைக்க சென்ற பொழுது இருவரும் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது. பலமுறை அனைத்தும் அவர்கள் வெளியே வரவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால் குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகாலை 3:30 மணியளவில் ஆனந்தியின் பெண் குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் காவல் துறையினர் செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child died because govt nurse slept in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->