நாகர்கோயிலில் பரபரப்பு.. சர்ச்சை வீடியோ வெளியிட்ட கனல் கண்ணன் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் கனல் கண்ணன். இவர் தற்பொழுது இந்து முன்னணி அமைப்பில் கலை இலக்கியப் பிரிவு செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோவை சில கருத்துக்களுடன் பகிர்ந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பதிவு தொடர்பாக ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக ஆஜர் ஆனார். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது. இந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணனை நாகர்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cinema stunt master Kanal Kannan arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->