பட்டாசு ஆலையில் உயிரிழந்த பெண்ணுக்கு 3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் - பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - பெண் கணக்காளர் பலி.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்த கேசவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை  செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் இந்தத் தீ வேகமாக பரவியதால் அறையில் உள்ள பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில், அந்த அறையில் இருந்த கணக்காளர் ஜெயசித்ரா தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் பணியாளர்களின் இருசக்கர வாகனங்களும் தீக்கு இரையாகின. மேலும், தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண் கணக்காளருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன். 

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin 3 lakhs announce financial to woman died in firecracker factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->