காணாமல் போன தமிழக மீனவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு.!
cm mk stalin compensation announce to missing fisherman family
கடந்த சில மாதங்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.
அதன் படி கடந்த 1-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியது. இந்த விபத்தில் விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில், மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார்.
மேலும் ராமச்சந்திரன் என்ற மீனவர் காணாமல் போயுள்ளார். அதே சமயம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து காணாமல் போனவரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக தேடியும் காணாமல் போன மீனவர் ராம்ச்சந்திரனின் உடல் கிடைக்காததால், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin compensation announce to missing fisherman family