வெள்ளகோவில் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் வெள்ளகோவில் அருகே பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுக்கா வெள்ளகோவில் செம்மாண்டாம்பாளையம் சாலை, பெரியசாமி நகர் அருகில் இன்று (10.12.2024) காலை அகலாப்பாளையம்புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த சரஸ்வதி, அதே பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகலரப்பாளையம்புதூரைச் சேர்ந்த மாணவிகள் செல்வி, ராகவி மற்றும் யாழினி உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், தனக்கு முன்னால் சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதிய விபத்தில் அனைவரும் பலத்தக் காயமடைந்தனர். 

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆசிரியர் சரஸ்வதி, செல்வி மற்றும் ராகவி உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாழினி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin compensation announce to tirupur accident died family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->