நீட் தேர்வில் மோசடி! குஜராத் விவகாரத்தை கையிலெடுத்த முதல்வர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும், நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளதை சுட்டிக்காட்டி வெளியான நாளிதழ் ஒன்றின் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர். மு க ஸ்டாலின், நீட் தேர்வு சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள், அதன் அடிப்படையில் உள்ள சமத்துவம், உண்மை தன்மையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். 

அண்மையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அடிப்படையில் முறைகேடு நடந்தது அம்பலமான நிலையில், குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு ஓஎம்ஆர் தாள்களை (விடைத்தாள்) கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக கூறி, கோத்ராவில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தின் தலைவர் உட்பட ஐந்து பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர் என்று, பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர். மு க ஸ்டாலின், நீட் தேர்வு முறைக்கு மாற்று அவசர தேவையை இந்த செய்தி சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் அந்த பதிவில், பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்ட முன்னேற்றத்திற்காக அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நீட் தேர்வு அந்த வாய்ப்பை தடுத்துக் கொண்டிருக்கிறது. 

நீட் தேர்வினால் மாணவி அனிதா உள்ளிட்ட எண்ணற்ற மாணவர்கள் பரிதாபகரமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு மோசடி என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condemn to Central Govt for Gujat NEET 2024 scam issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->