மகளின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த தந்தை - முதலமைச்சர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
cm mk stalin helped to girl treatment
மகளின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த தந்தை - முதலமைச்சர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது மூன்று வயது மகளுடன் அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்ஸ்கோவிலில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து விமானம் அவசரமாக துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக மனோஜ் குழந்தையை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது மனோஜிடம் இருந்த அனைத்து பணம் செலவானதால் மனோஜ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரினார். அதன் படி முதலமைச்சரும் 10 லட்ச ரூபாய் அளித்து உதவி செய்தார்.
அங்கு சிகிச்சை பெட்ரா பிறகு மனோஜ் குழந்தையுடன் துருக்கியில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிறுமியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளின் மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட தந்தையின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்சியடைய வைத்துள்ளது.
English Summary
cm mk stalin helped to girl treatment