மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


நூற்றாண்டு விழா நாயகர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கவுரவித்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்று, முதலமைச்சர் முக ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இவ்விழாவுக்கு தலைமையேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிசெய்யத்தவது, “என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். 

நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. ‘நா-நயம்’மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிக மிகப் பொருத்தமானது.

நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர். உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை!

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிகப் பொருத்தமானதுதான். 

தலைவர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது அவருக்கு செலுத்தப்பட்டுள்ள மரியாதையாக அமைந்துள்ளது. அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அதனை வெளியிட்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நன்றி.

இயற்பியல் பேராசிரியராக தனது தொழில் வாழ்க்கையை ராஜ்நாத் தொடங்கினார். அதன் பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டு, கடுமையாக உழைப்பு எம்எல்ஏ, மாநில அமைச்சர், உத்தரப் பிரதேச முதல்வர், இப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி கண்டவர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க நான் அழைக்க விரும்பியவர்களில் அவர் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் பல்வேறு தரப்பினருடன் நேர்மறை ரீதியாக உறவு பாராட்டுபவர் அவர்.

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் தமிழினத்தின் நெஞ்சத்தில் நிறைந்துவிட்ட தலைவர் கருணாநிதி புகழ் வாழ்க” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Thanks to Central Govt and PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->