எனது அமைச்சரை 'டிஸ்மிஸ்' செய்கிறார் ஆளுநர்! குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்!
CM MKStalin Letter to President Murmu details
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக குடியரசுத் தலைவர் முர்முவுக்கு,19 பக்க புகார் கடிதம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்து உள்ளதாகவும், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அந்த கடிதத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது. நாகாலாந்து கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், "அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்து வரும் தமிழக ஆளுநர், தனது அமைச்சர் (செந்தில்பாலாஜி) ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில், அவரை டிஸ்மிஸ் செய்ய அவசரக் கதிகள் செயல்படுவதன் மூலம், தனது அரசியல் சார்புகளை ஆளுநர் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆளுநர் தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள் மூலம் தான் ஒரு தலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். உயர் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு தகுதியானவர்தான்.
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 156 (1) இல், குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை ஆளுநர் தனது பதவியில் இருப்பார் என்று உள்ளது.
எனவே தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், தமிழக அரசின் நலம் கருதியும், மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் (குடியரசுத் தலைவர்) தங்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என் ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்" என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MKStalin Letter to President Murmu details