கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படுகிறது - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் நூல்கள் அனைத்தும், நூல்ரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடையாக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க இது வாய்ப்பாக அமையும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி எழுதிய 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதை படைப்புகள் நாட்டுடையாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஒருவரால் வாழ்நாள் காலத்தில் இத்தனை படிப்புகளை வழங்க இயலுமா? என்ற வியக்கும் வண்ணம் கருணாநிதி சாதனை புரிந்துள்ளதாகவும், 108 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூபாய்  7.76 கோடி தந்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் அந்த அறிவிப்பில், கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் படைத்துள்ளார்.

கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு. 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்கு நீதி' என்னும் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ஆம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர் அவர்கள்.

எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும்.

இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Announce karunanithi All text boks are nationalized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->