மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற இருவர் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அயன்சிங்கம்பட்டி கிராமம், மடத்துத் தெரு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, த/பெ.துரைசாமி மற்றும் பேரின்பராஜா, த/பெ.பேச்சிமுத்து உள்ளிட்ட இருவரும் நேற்று (28-10-2023) இரவு ஜமீன்சிங்கப்பட்டியிலுள்ள தங்களது வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளனர்.

அதன் படி அவர்கள் வாய்காலில் இறங்கி மடையைத் திறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக விலங்குகள் வருவதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வலையில் சிக்கி மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin compensation announce to tirunelveli electric shock died peoples family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->