ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
CM Stalin condoles death of Odisha Health Minister
ஒரிசா மாநில அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்த நபா தாஸ் நேற்று பிரஜாராஜ்நகரில் உள்ள காந்தி சவுத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் சென்றார். அப்பொழுது காரில் இருந்து இறங்க முயன்ற அமைச்சரை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால்தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் நபா தாஸ் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.
இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபா தாஸ் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமைச்சரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்தல் வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நபா தாசின் துரதிஷ்டவசமான மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. நபா தாஸ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
CM Stalin condoles death of Odisha Health Minister