பொங்கல் பரிசு வினியோகம்... முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சார்பில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக முழுவதும் உள்ள 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரில் இன்று துவக்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெறும். பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் நுகர்வோர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளிக்கும்படி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin inaugurate pongal gift distribution today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->