அமித் ஷாவுக்கு மு.க. ஸ்டாலின் பரபரப்பு கடிதம்! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக மு.க ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 

மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறது. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் சட்ட பாடங்கள் மாற்றி அமைக்க வேண்டும். 

சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை தெளிவாக மீறுகிறது என முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். 

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஷிதா, பாரதிய நாகரிக சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin letter to Amit Shah 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->