தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் பரபரப்பு கடிதம்! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல் மீனவ சமுதாயத்தினர் இடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும் 162 மீன்பிடி படகுகளும் உள்ளது. எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதராக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளி உறவு துறை அமைச்சரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin letter to union minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->