தமிழகத்தில் விடியல் தந்த திராவிட மாடல் அரசு! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னைக்கு புறப்படுகிறார்.

டோக்கியோ விமான நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ், முதலமைச்சர் ஸ்டாலினை வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ஜப்பானிலிருந்து இன்று தமிழகம் திரும்பக் கூடிய முதல்வர் மு க ஸ்டாலின், தனது தொண்டர்களை காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "பத்தாண்டு கால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலை தந்து கொண்டிருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு.

இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே நம் இலக்கு.

தமிழ்நாடு அரசு வெளிப்படுத்தன்மையுடன் செயல்படுகிறது. தொண்டர்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Say About Dravida Model Govt may 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->