மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி: முதலமைச்சர் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி மதிய உணவு திட்டத்திற்காக ரூ.4114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

அவ்வாறு வழங்கப்படும் உணவூட்டு செலவின தொகையினை முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கு ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது உயர்த்தப்பட்டுள்ள செலவின்படி தினசரி காய்கறிகளுக்கான செலவில் ரூ. 1.33 எனவும் உப்பு உள்ளிட்ட தாளிப்பு பொருட்களுக்கான செலவில் ரூ. 0.46 எனவும் எரிபொருட்களுக்கான ஏரி பொருளுக்கான செலவில் ரூ. 0.06 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin says additional funding mid day scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->