சாதிவாரி கணக்கெடுப்பு... மத்திய அரசு நடத்த விரைவில் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி.!  - Seithipunal
Seithipunal


சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த கோரி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் போது பேசிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே. மணி, 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாள் கிடப்பில் இருப்பதாகவும் சாதிவாரி கனகிடபை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 10.5% தரவுகள் இல்லாததால் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எந்த விதத்திலும் அரசு தடையாக இல்லை. 

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

அப்போது ஜி.கே. மணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாதிவாரி கணக்கிடப்பை மத்திய அரசு நடத்த கோரி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும். அதுவும் இந்த கூட்ட தொடரிலேயே தீர்மானம் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin says Caste wise census Central govt soon decide conduct


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->