தமிழகத்தில் புதிதாக 5 நிறுவனங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையின் 12வது கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனடந்தது.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவள்ளூரில் காட்டர் பில்லர் நிறுவனம் செயல்படும் நிலையில், கூடுதலாக முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், அமைச்சரவை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

அதேபோல், உலக முதலீட்டாளர் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN tamilnadu petronas caterpillar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->