அரசு பள்ளிகளை மேம்படுத்த "நம்ம ஸ்கூல் திட்டம்"..!! முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!!
CM Stalin will inaugurate Namma School Project to improve govt schools
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் பங்களிப்புடன் "நம்ம ஸ்கூல்" திட்டத்தை நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது குறித்து பேசி அவர் "ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படித்தவர்கள் தற்பொழுது நல்ல நிலையில் வேலை செய்பவர்களாக, தொழிலதிபர்களாக, அரசு பணியாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் அளிக்கும் நிதி பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தூய்மையான கழிவறை, சுகாதாரமான குடிநீர், வருடாந்திர பராமரிப்பு, இணையதள வசதி போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் திட்டத்தை நாளை (டிச.19) தொடங்கி வைக்க உள்ளேன். தொழிலதிபர்கள் பெரு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை தட்டெடுத்து கொள்ளலாம். அதற்கான இணையதளத்தை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
அரசு பள்ளிகளுக்கு செலவிடப்படும் நிதி குறித்தான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்படும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம், அனைத்தையும் அரசாங்கமே செய்து விட முடியாது. அவற்றை புரிந்து கொண்டு மக்களும் சேர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும். தமிழகத்தை கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம்" என பேசியுள்ளார். தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தால் அரசு பள்ளிகளின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CM Stalin will inaugurate Namma School Project to improve govt schools