"தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் டிவிட்!
cmstalin Siddaramaiah congress dmk DK Shivakumar Karnataka
"தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்" என்று, பெங்களூருவில் சித்தராமையாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த முதல்வர் முக ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில், "மாண்புமிகு சித்தராமையா மற்றும் மாண்புமிகு டி.கே.சிவகுமார் முறையே கர்நாடக முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்றார். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மதச்சார்பற்ற இரட்டையர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தின் மூலம் கர்நாடகா மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

தெற்கில் அறிவிக்கப்பட்ட விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும், பெங்களூரில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழா அத்தகைய மாற்றத்தின் மணிக்கொடியாகும்" என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cmstalin Siddaramaiah congress dmk DK Shivakumar Karnataka