எரிகல் விழுந்த இடத்தை பார்க்க குவியும் பொதுமக்கள்!பள்ளத்துடன் செல்பி எடுத்து கொண்டாட்டம்!!
coal fell see the place people
சமீபத்தில் ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழந்து ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். எரிகல் விழுந்து ஏற்பட்ட பள்ளத்துடன் புகைப்படம் எடுத்து பொதுமக்கள் உற்சாகம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பரது நிலத்தில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது சத்தம் கேட்ட பகுதியில் 5 அடி ஆழம் இரண்டடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. அந்தப் பள்ளத்தில் இருந்து நெருப்பு மற்றும் சாம்பல் போன்ற மண் காணப்பட்டது.
பள்ளத்திலிருந்து வெப்பம் வீசியது. இந்த நிலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டனர். அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விழுந்தது எரிகல் தான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் அப்பகுதிக்குச் சென்று பள்ளம் ஏற்பட்டிருக்கும் இடத்தை ஆச்சிரியத்துடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனைப் பார்த்து பலரும் அப்பகுதிக்கு வர தொடங்கியதால் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
English Summary
coal fell see the place people