சீட்டுக்கட்டுபோல் நொறுங்கிய வீடுகள் - மாற்று வீடு வழங்க கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு.!
coimbatore district replacement house to house collapse peoples
கோயம்புத்தூர் சிவானந்தா காலனி அருகே உள்ள சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இதனால், ஓடையின் கரையோரம் இருந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன் படி அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. இதனால், சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது.
அடுத்த சில நிமிடங்களிலேயே அருகே இருந்த இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இடிந்த வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது. இந்த நிலையில், வீட்டை இழந்த 3 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
coimbatore district replacement house to house collapse peoples