கோவை, நெல்லை மேயர் ராஜினாமா! காரணம் இவர்கள் தானா? அதிரவைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


கோவை மேயர் கல்பனா தந்து தனிப்பட்ட காரணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல்,  நெல்லை மேயர் சரவணனும் தனது ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி உள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் கல்பனா ஆனந்தகுமார் கோவை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட போதே அவருக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.

மேலும், மேயர் கல்பனாவின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக திமுக கவுன்சிலர்களே குற்ற சட்டி இருந்தனர். மேலும், மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மேலும், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகுவதாக கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்துள்ளார்.

இதேபோல் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம், திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தொடர்ந்து மோதலில் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

நெல்லை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றதில் இருந்து இவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் ஏற்பட்டு வந்தது. பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததால், மக்கள் நலத்திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 

 

இதற்கிடையே, கமிஷனரிடம் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கிய நிலையில், சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, முதலமைச்சர் (திமுக தலைவர்) முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே இருவரும் தங்களின் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், புதிய மேயர்களின் பெயர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும் திமுக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Nellai Corporation Mayor


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->