நெல்லை, கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்: வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நெல்லை மேயர் சரவணன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 

கோவை மேயர் கல்பனா தந்து தனிப்பட்ட காரணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக கடந்த வாரம் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல்,  நெல்லை மேயர் சரவணனும் தனது ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி இருந்தார்.

இதில், கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்ட போதே, அவருக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.

மேலும், மேயர் கல்பனாவின் செயல்பாடுகள் அதிருப்தி, மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் தலையீடு என திமுக கவுன்சிலர்களே குற்றம் சட்டி இருந்தனர். இதன் காரணமாக விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் சொல்லப்பட்ட நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகுவதாக கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தார்.

இதேபோல் நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் நலத்திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம், திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தொடர்ந்து மோதலில் ஏற்பட்டு வந்த நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே வெளியான தகவலின்படி, முதலமைச்சர் (திமுக தலைவர்) முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே இருவரும் தங்களின் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், புதிய மேயர்களின் பெயர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும் திமுக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா கடிதம் சிறப்பு கூட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் புதிய மேயர் தேர்தல் நடைபெறும் என்று அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் கோவை மேயர் ராஜினாமா தீர்மானத்தை வாசித்த போது, அதிமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Nellai Corporation Mayor Election


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->