கோவையில் படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளுக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கோவையில் படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளுக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 894 மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது. இவர்களில் 226 மாணவர்களை போலீசார் நேரில் சந்தித்து, படிப்பை பாதியில் விட்டதற்கான காரணம் குறித்து கேட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த மாணவர்களில் 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் நடந்து முடிந்த ஆண்டு இறுதித் தேர்வையும் நல்லபடியாக எழுதியுள்ளனர். இதில் சிலருக்கு பள்ளி கட்டண உதவியும், மருத்துவ உதவியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், கோவை மாநகரில் 702 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டி அவர்களில் 316 பேரை போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். 

இதில் சிலருக்கு பள்ளி கட்டணமும், மருத்துவ உதவியும் செய்யப்பட்டு இரண்டு மாணவர்களின் பெற்றோருக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore police helping to dropout education student study again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->