கோவை || இயல்பு நிலைக்குத் திரும்பியதால் மத நல்லிணக்க கூட்டத்தை நடத்த போகும் கோவை காவல்துறை! - Seithipunal
Seithipunal


பாதுகாப்பு பணிக்காக வந்த வெளிமாவட்ட போலீசார் மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு வருகை!

கோவை மாநகரில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் அரங்கேறின. பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சார்ந்த இடங்கள் மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் கோவை மாநகர போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் கோவை மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பைச் சார்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவைக்கு வருகை புரிந்து பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் "கோவை மாநகரில் கடந்த மாதம் நடந்த சில அசம்பாவித சம்பவங்கள் காரணமாக பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்திருந்தனர். தற்பொழுது கோவை மாநகரில் இயல்பு நிலை திரும்பி விட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மொத்தம் 100 கமாண்டோ படையினர் உட்பட 550 பேர் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்களும் பணியிடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இதுவரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளோம். இன்னும் சிலரை தேடி வருகிறோம். ஒரு சம்பவத்தில் மட்டும் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். போலீசார் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பு உடைய மற்ற நபர்கள், சதி திட்டம் பற்றி தகவல்கள் தெரிய வரும். கோவை மாநகரில் அமைதியை நிலை நாட்டும் நோக்கில் பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் மத நல்லிணக்க கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" இவ்வாறு கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Police is going to hold religious reconciliation meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->