ஜூனியருக்கு மொட்டை அடித்த சீனியர்கள்! மது அருந்த பணம் கொடுக்காததால் அரங்கேறிய அவலம்! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோயம்புத்தூர், அவிநாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவரிடம் முதுநிலை மாணவர்கள் மது அருந்துவதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

இதற்கு முதலாம் ஆண்டு மாணவர் பணம் தர மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு மொட்டை அடித்து முதுநிலை மாணவர்கள் ராகிங் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இது குறித்து அறிந்த முதலாம் ஆண்டு மாணவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாதவன், மணி, வெங்கடேஷ் உள்பட 7 மாணவர்களை கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Seniors ragging first year student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->