கோவையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம்! - Seithipunal
Seithipunal


கோவை மாநகரில் வருகிற 26-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், இந்த விதியை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்ககை எடுக்கபடும் என, மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து, வருகிற 26-ந் தேதி முதல் கோவை மாநகரில் அதிகமாக ஒலி எழுப்பும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என சோதனை நடத்தப்படும். 

இதனை தொடர்ந்து, இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஆராய்ந்ததில் தலைக்கவசம் அணியாமல் பின்னல் அமர்ந்து செல்லும் நபர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகமாக உள்ளது.  

எனவே இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை செயல்பட்டால் 100 சதவீதம் விபத்துக்களை குறைக்க முடியும். 
  

மேலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தலைக்கவசம் அணியாமல் பின்னல் அமர்ந்து வருபவர்கள் மீது வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு அவர்களுக்கு தக்க தண்டனையாக போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என குறிப்பிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore two wheelers sitting back persons helmets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->