சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம், நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு !! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் முறைகேடாக எந்த அனுமதியும் இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சும் 2 தனியார் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சமூக நலத்தை கருத்தில் கொண்டு மதுரையை சேர்ந்த ஒரு நபர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை  அடிப்படையாக கொண்டு நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் ஜி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு  இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த மனுவில், ஊராட்சி ஒன்றியத் தொகுதிகளை நான்காக அரசு வகைப்படுத்தியுள்ளது அதாவது அதிக சுரண்டப்பட்ட மற்றும் முக்கியமானவை 'ஏ' பிரிவாகவும், அரை முக்கியமான மற்றும் பாதுகாப்பானவை 'பி' பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளது. குடிநீர் நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை எடுப்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

இருந்தும், மனுவில் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் அரசின் எந்த வழிகாட்டுதல்களையும்  பின்பற்றால், மேலும் அந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க முறையான அனுமதி பெறாமலும் செயல்பட்டன. தண்ணீர் நிறுவனங்களை தடை செய்யாவிட்டால், கூடிய சீக்கிரத்தில் நிலத்தடி நீர் வளம் அழியும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த தனியார் நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collector ordered to take action against private company illegally pumping underground water


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->