சிவகங்கை : பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை.! மாணவர் உட்பட 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ்(19). இவர் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி (22) என்பவரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் பாலகணேசின் வகுப்பு தோழியான காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவிக்கு, பாலகணேஷ் மூலமாக பசுபதி அறிமுகமானார்.

இதையடுத்து மாணவி, பசுபதி மற்றும் பாலகணேஷ் ஆகிய இரண்டு பேருடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் மாணவியை தனியாக சந்திக்க வற்புறுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் மாணவி இதற்கு மறுத்ததால் இரண்டு பேரும் சேர்ந்து மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மாணவியை மீட்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பசுபதி மற்றும் பால கணேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College girl committed suicide due to sexual harassment in sivagangai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->