#நாமக்கல் || தாத்தாவுக்கு விஷம் வைத்த பேரன் கைது.!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!!
College student arrested for poisoned to grandfather
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் கடந்த ஏப்ரல் முப்பதாம் தேதி இரவு பகவதி என்ற கல்லூரி மாணவன் தனது குடும்பத்தினருக்காக ஏழு பார்சல் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார்.
அதனை தனது அவரது நதியா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு உட்கொண்டுள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல் நலக் கறைவு ஏற்பட்டதால் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து சீல் வைத்தனர். மேலும் உணவின் மாதிரி சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட உணவில் ஆர்கனோ பாஸ்பரசிகளும் பூச்சி மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக உணவு வாங்கி வந்த பகவதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசரணையில் தன் பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் சிக்கன் ரைஸ் பூச்சி கலந்து கொடுத்ததாக பகவதி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதிக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
College student arrested for poisoned to grandfather