கொடூரம்! கல்லூரி மாணவனை அடித்து கொலை செய்த சிறுவர்கள்! 5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் அவரது மகன் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி கஜமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று  ஸ்ரீரங்கம் கீதாபுரம் புஷ்பா நகரில் உள்ள தனது உறவினர் சாந்தி வீட்டிற்கு ரஞ்சித் கண்ணன் வந்துள்ளார்.பின்னர் உறவினர்களின் மகனுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் கீதாபுரம் படித்துறையில் நின்று காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்து அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அமர்ந்து கொண்டு காவிரியில் செல்லும் தண்ணீரை பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சித் கண்ணனை நீ யாரு? ஏன் இங்கு வந்தாய்? என கேள்விகளை கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்து அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கீழே கிடந்த காட்டையை எடுத்து ரஞ்சித் கண்ணன் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் மண்டைய உடைந்து கீழே விழுந்த ரஞ்சித் கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் கண்ணன் சமீபத்தில் சிகிச்சை 12 சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் கண்ணனை அடித்துக் கொண்டதாக நவீன்குமார், விஜய், சுரேஷ் மற்ற இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student beaten to death near Pudukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->