தவறி விழுந்த செல்போன்.. எடுக்க சென்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..!
College Student Dead
ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற இளைஞர் ரயில் மோதி பலியான சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புலவனூரை சேர்ந்த பாரதிராஜா. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பரங்கிபேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி விழுந்தது.
அதனை எடுக்க ரயிலுக்கு அடியில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டதில் அவர் ரயில் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.