நடுரோட்டில் தீக்குளித்த கல்லூரி மாணவி - போலீஸார் தீவிர விசாரணை.!!
college student fire to her self in chennai
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியைச் சேர்ந்தவர் ஞான குருநாதன் மகள் சண்முகேஸ்வரி. காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோடெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு 15 நாட்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அந்த மாணவி அடையார் இந்திரா நகரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்றுடன் அந்தப் பயிற்சி முடிந்ததனால், மாணவியின் தந்தை ஞான குருநாதன் அவரை அழைத்துச் செல்வதற்காக நேற்று அடையார் வந்தார். அங்கு தனது மகளை காரைக்குடிக்கு அழைத்து செல்வதற்காக தயாராகி காத்திருந்தார்.
அப்போது, கோடம்பாக்கத்தில் இருந்து அடையார் வந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அரை லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு சிறிது தூரம் வந்தவுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த கோர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே தீயை அணைத்து மாணவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து அடையார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student fire to her self in chennai