திருப்பூரில் ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த கல்லூரி மாணவர்கள்.!
college students besieged collecter office in tirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவருடைய மகன் சஞ்சய், சிக்கண்ணா அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 19-ந்தேதி தனது நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, அவரது குடும்பத்தினரும், தீயணைப்பு படையினரும் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே போலீசார் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியில் உள்ள கால்வாயிலும் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக மாணவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தக்கோரி அவரது உறவினர்கள் ஆண்டிப்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாணவரின் தாயார் சங்கீதா தனது உறவினர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், "பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. எனவே வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும்" என்றுத் தெரிவித்து இருந்தார்.
மேலும், மாணவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசு சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் இன்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
English Summary
college students besieged collecter office in tirupur