வலியுறுத்தல்!!! கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவியுங்கள்!!! - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி மற்றும் அதிபர் அனுரா குமார திசநாயகே இருவரும் இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்கள்.

இதில் தம்புள்ள என்ற இடத்தில் 5000  மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி (solar power ) மின் உற்பத்தி நிலையத் திட்டம், இலங்கை முழுவதுமுள்ள சுமார் 5000 மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

மேலும் அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய  விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கி கவுரவித்தார்.

அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.அதன் பிறகு பிரதமர் மோடி,தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது,"மீனவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்"எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Release arrested Tamil Nadu fishermen humanitarian grounds Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->