அதிரடி காட்டிய அமலாக்கத்துறை - 'எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்..!!
money seized in emburan movie producer places
பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக 'எல் 2 எம்புரான்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் தமிழகத்தில், கோகுலம் சிட்பெண்ட், நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை சமீபத்தில் நிறைவுபெற்றது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
money seized in emburan movie producer places