நயவஞ்சகர்கள் நீங்கள்..!!!உங்களுக்கு வெக்கமாக இல்லையா? - பில்கேட்ஸ்ஸை கேள்வி கேட்ட ஊழியர்
You hypocrites Arent you jealous Employee questions Bill Gates
இஸ்ரேலிய நாட்டு இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு அதாவது Artificial intelligence (AI) தொழில்நுட்பத்தை MICROSOFT நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவில் Microsoft நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் சத்தம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதில் முஸ்தபா சுலேமான்,MicroSoft ( AI ) -இன் தலைமை நிர்வாக அதிகாரி பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று அனைவர் முன்னிலையிலும் கூச்சலிட்டார்.
அப்போது மற்றொரு ஊழியர் Microsoft இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. ? நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.
இதில் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க MicroSoft மற்றும் Open AI ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சையான பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
You hypocrites Arent you jealous Employee questions Bill Gates