அதிமுக பொதுக்குழு கூட்டம் -உறுப்பினர்களுக்கு இபிஎஸ் அழைப்பு..! - Seithipunal
Seithipunal


வருகின்ற இரண்டாம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது வழக்கம். அந்த வகையில் மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coming may 2nd admk public meeting public secretary eps info


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->