தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - எப்போது அமல்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை திருப்பிக் கொடுக்கும், திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிறப்பு அமர்வு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

அதன் படி இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 12 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக இல்லை என்று தெரிவித்தனர். 

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த தொகையை சரி பார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தெளிவான அறிக்கையை அளிக்குமாறு மதுபான நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்க உள்ளது என்று வாதிடப்பட்டது. அதற்கு தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதையடுத்து, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming septamber empty liquar bottles return tasmac scheme implemented in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->