கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - அண்ணா பல்கலையில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு.!
committee form in chennai anna university for student harassment case
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் பொறியியல் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி காதலனான மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் அதனை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஞானசேகரன் என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வாலிபர் ஞானசேகரனால் மாணவி கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர்ரில் அதிர வைக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
committee form in chennai anna university for student harassment case