கொலை மிரட்டல்! எடப்பாடி காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், எடப்பாடியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது ஓபிஎஸ் ஆதரவாளர் வா புகழேந்தி அவர்கள் காரை இடைமறித்து தாக்கி தகாத வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட கழக செயலாளர் பி ஏ ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து கலவரம் ஏற்படுத்தியது தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் முருகன் செல்வம் உள்ளிட்ட 30 பேர்கள் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவினை சேலம் புறநகர் ஓபிஎஸ் ஆதரவு மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி ஏ ராஜேந்திரன் அளித்துள்ளார்.

முன்னதாகவே கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க சேலம் மாநாடு சம்பந்தமாக சேலம் மண்டலத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக புகழேந்தி செய்தியாளரிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint Against Edappadi palanisami in edappadi police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->